BSK WEB PAGE

  • Home
  • SOCIAL MEDIA
    • Facebook
    • Instagram
    • Twitter
  • TAMIL NEWS PAPER
    • Srilankan Paper
      • Virakesari
      • Uthayan
      • Thinakaran
    • Indian News Paper
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
  • YOU TUBE
  • BLOG
    • Recipes
    • Tamil
  • Home
  • Photos
    • BSK Design Phots
    • Photos/Wallpaper
    • Cinema Photos
    • GIF
  • VIDEO
    • BSK Edited Video
    • Social Media Video
    • Video Song
      • Office
  • Social Media
    • Facebook
      • ponbsanjaykumar
      • தமிழ் அவமானம் அல்ல. அது உன் அடையாளம்
      • இந்து சமயம்
    • Instagram
    • You Tube
    • Twitter
  • RECIPE
  • Useful info
    • Document
    • Photo
    • Video
  • About Page

விநாயகர் பற்றிய 25 தகவல்கள்

 Useful Info Document   


1.விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.
2. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.
3. விநாயகர் பூஜைக்கு உகந்த மலர்கள் அருகம்புல், அரளி, நெல்லி, மரிக்கொழுந்து, ஜாதிமல்லி, வெள்ளெருக்கு, கரிசலாங்கண்ணி, எருக்கு, மாதுளை, புன்னை, மந்தாரை, மகிழம்பூ, வெட்டிவேர், தும்பை, சம்பங்கி, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வந்தி, பவழமல்லி முதலியனவாகும்.
4. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.
5. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.
6. திருஞானசம்பந்தர் அன்பிலாந்துறை என்னும் தலத்துக்குச் சென்றபோது ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியது. இதனால் அவர் கரையில் இருந்தவாறே பதிகம் பாடினார். அதனைக் கேட்ட விநாயகர் செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
7. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.
8. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.
9. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி – பிரம்ம உருவம், முகம் – விஷ்ணு, கண் – சிவரூபம், இடப்பாகம் – சக்தி, வலப்பாகம் – சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.
10. விநாயகரை வழிபடும் நாடுகள் சாவகம், பாலி, போர்னியா, திபெத், பர்மா, சியாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மங்கோலியா, இந்தியா.
11. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசாரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.
12. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.
13. விநாயகரை வழிபட நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
14. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.
15. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.
16. பிள்ளையார் அழித்த அரக்கிகள். 1) விரசை. 2) பிரமதை. 3) சிரம்பா.
17. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.
18. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக ஸப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.
19. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாய கருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.
20. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.
21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.
22. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.
23. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் “ஐங்கரன்” என்று அழைக்கப்படுகின்றார்.
24. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.
25. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Email ThisBlogThis!Share to XShare to Facebook
Newer Post Older Post Home

Popular Posts

  • யாரை நம்புவது
    மரணம் வரை விடை கிடைக்காத ஒரே கேள்வி யாரை நம்புவது
  • உலகில் மிக கூடியவை
    உலகில் கூடுதல் வார்த்தை கொண்ட நூல் மகாபாரதம் உலகில் கூடுதலான கப்பல் போக்குவரத்து உள்ளது பனாமா கால்வாய் உலகில் கூடுதலான அகழி உள்ள க...
  • தீபாவளி 2016
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  • SRK and his son !
  • தமிழின் வரலாறு
    தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்...
  • தயவு செய்து அதிகம் இதை பகிரவும்
    ராமாயணம், மகாபாரதம் எல்லாம் கட்டுகதை என்று கூறும் அறிவு ஜிவிகள் அறிவதற்க்கு......பீமனின் மகன் கடோர்கஜனின் அஸ்த்தி (எலும்புகூடு...
  • தஞ்சை கோவில் அதிசயம்
  • காதலர் தினம் 2016
    காதலர் தினம் கொண்டாடும் அனைத்து காதலருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
  • ஒரு வட்டத்த போட்டு வாழ்ந்துட்டு செத்து போறான் இது தான் கடைசிமூச்சு வரைக்கும் வாழ்க்கை ...
  • மகாபாரதமும் நிஜமே!
    ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண...

My Facebook Page

  • Ponba Sanjaykumar
  • Ponba Digital Media
  • Nokkam
  • Recipes & More Informations

My Facebook Group

  • டீக்கடை பெஞ்ச் தமிழன்டா
  • எல்லாம் விளம்பரம் - தமிழ்
தமிழ் அவமானம் அல்ல. அது உன் அடையாளம்
  • BSK Design Photos
  • BSK Edited Video
  • Cinema Photos
  • Gif
  • Photos/Wallpaper
  • Social Media Video
  • Useful Info Document
  • Useful Info Photos
  • Useful Info Video
  • Video Songs
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.
- அப்துல் கலாம்

Copyright © BSK WEB PAGE | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates