
ராவணன் இலங்கையின் பெரும்பகுதியை ஆண்ட மாபெரும் மன்னனாக திகழ்ந்துள்ளான். மிகச் சிறந்த எழுத்தாளனாக திழ்ந்துள்ளான். நிறையநூல்களை எழுதியுள்ளான். தனது நாட்டில் பல சுரங்கப் பாதைகளை அமைத்து போர்க் கலையிலும் மன்னனாக திகழ்ந்தவன் ராவணன்.பிறன் மனைவியைக் கவர்ந்ததால் வீழ்ந்தான். ராமரின் மனைவி சீதையைக் கவர்ந்து வந்து சிறை வைத்ததால் வீழ்ந்தான் ராவணன். கொழும்பிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிகிரியாவில்தான் ராவணன் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ராவணன் மீதுள்ள அன்பின் காரணமாக இலங்கையின் பல ஊர்களுக்கு அவனது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ராவண எல்லா, ராவணா கோட்டை, ராவணா கண்டா, ராவணா தேஷ் என அவை பல இடங்களில் இருந்தன.
இந்நிலையில், தங்கத்தால் உடல் முழுவதும் பூசி அடக்கம் செய்த இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம் இதனால் பல தகவல்கள் புராதன அடையாளங்கள் கிடைத்துள்ளதாம்.
இதனை காட்டும் சிறப்பு வீடியோவும் வெளிவந்துள்ளது.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் உலாவரும் இந்த வீடியோ உண்மையா என ஆராயப்பட்டு வருகின்றது. இதன் நம்பத்தன்மை இன்னும் உரிதப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.