
954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த செய்தியின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் புவியைச் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது.
விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் ஆனது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் வெளியான இந்த பிளாக் நைட் பற்றிய செய்தி தீயாய் பரவியது.

விசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்று,ம் குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் கண்டறியப்பட்டது.
பிளாக் நைட் செயற்கைக்கோள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் முகவர் கண்கானித்துக் அறிவித்துள்ளனர்
பல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீது சிறப்பு கவனம் உண்டு.
1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா என்பவர் தான், பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்த முதல் மனிதர் என்ற புரளி ஒன்றும் கிளம்பியது.
மேலும் 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெற்றுவருவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
1957-ஆம் ஆண்டு தான் மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது.

அதே 1957-ஆம் ஆண்டு இசுப்புட்னிக் 1 விண்கலத்தில் (Sputnik 1) இருந்த விண்வெளி வீரர்கள் அடையாளம் காணமுடியாத ஒன்று, போலார் சுற்றுவட்டப்பாதையின் அருகே நிழல் ஆடுவதாக அறிக்கை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மார்ச் 7-ஆம் தேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழ் இந்த பிளாக் நைட் விண்கலம் பற்றி செய்தி வெளியிட்டது.
1957-ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் செலுத்த முனையத் தொடங்கி, 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்பட்ட போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் பூமியை கண்கானித்தல் போன்றவைகளை செய்வதோடு, போலார் சுற்றுவட்டப்பாதையில் அடிக்கடி தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேமிக்க உதவும் என்று நம்பப்பட்டது. Show Thumbnail
பின் 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலம் ஆனது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்கும் என விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் கணிப்பு தெரிவித்தனர்.
அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது.
முதல் முறையாக ரேடாரில் பிளாக் நைட் சிக்கிய 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இதற்கு க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியது.

இறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் 'பிளாக் நைட் சாட்டிலைட்' என்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதை உறுதி செய்தது.